ஜெர்மனியின் எல்லைகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி அரசு நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தங்கள் குடிமக்கள் ஆஸ்திரியா, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளுக்கு அநாவசியமாக பயணிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நாடுகளிலிருந்து வரும் மக்கள் அனைவரும் ஜெர்மனிக்குள் வரவேண்டுமென்றால் சுமார் 48 மணி நேரங்களுக்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்பே அவர்கள் ஜெர்மனிக்குள் செல்ல முடியும் என்று Robert Koch நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் ஆவணம் சமர்பித்திருந்தாலும் கூட ஜெர்மனிக்குள் வந்தவுடன் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்தியாக வேண்டும். Robert Koch நிறுவனத்தின் தலைவர் இது பற்றி கூறியுள்ளதாவது, ஜெர்மனில் கொரோனாவின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்தாவிடில் தினந்தோரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.