இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் . இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் வருகிறார் . அந்த வகையில் இவர் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது .
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ‘பபூன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.