Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பேத்தியை” கல்லால் அடித்து கொன்ற “கொடூர தாத்தா” … மனைவி விட்டு சென்றதால் நடந்த விபரீதம் ..!!

பொள்ளாச்சி அருகே தனது பேத்தியை கல்லால் அடித்து கொலை செய்த கொடூர தாத்தாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

 கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே அரசம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது முதல் மனைவி பிரிந்து சென்றதால் ,  இரண்டாவதாக ஒரு பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். பின் இவரும் , இவரது மனைவி மற்றும் மகன் குமார் , மருமகள் முத்துமாலை மற்றும் 10 வயது பேத்தியுடன் வசித்து வந்தார் . இந்நிலையில், இவரது  இரண்டாவது மனைவி அண்மையில்  விட்டு பிரிந்து சென்று விட்டார்.

Image result for baby murder

  பின்னர் , செல்வராஜ் மருமகள் முத்துமாலை கையிலிருந்து பேத்தியை வாங்கி இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றார் . பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில்  வீட்டினர்  புகார் அளித்தனர் . அதனால் , காவல்துறையினர் செல்வராஜின் செல்போன் சிக்னளை வைத்து ரயில்நிலையத்தில் இருப்பதை  கண்டுபிடித்தனர். பின்னர், காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து விசாரணைநடத்தினர்.

Image result for murder images

 அதன்பின், காவல்துறையினர்செல்வராஜிடம் விசாரணை செய்தபோது ஒத்தக்கால் மண்டபம் தொப்பம் பாளையம் பிரிவு பகுதியில் பேத்தியை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக அவர் கூறினார். எனவே ,காவல்துறையினர் அங்கு சென்று தர்ஷினியின் சடலத்தை கைப்பற்றினர். மேலும்,  தனது இரண்டாவது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு காரணம் மகளும் மருமகளும் தான் என நினைத்து பேத்தியை கொலை செய்துவிட்டதாக செல்வராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories

Tech |