கணவன் மனைவிக்கு ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியின் ஒரு கையையும் மற்றொரு கையில் 3 விரலையும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெத்துலில், கிராமத்தில் வசிக்கும் கணவர் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருநாள் வாக்குவாதம் முற்றவே கணவர் மனைவியின் கையை வெட்டியதோடு மற்றொரு கையில் இருந்த மூன்று விரல்களையும் வெட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
அவரின் அலறல் சதத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.