தேனியில் தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அ.தி.மு.க அணி பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போராட்டத்தில் அவர்களது கையில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான பேனர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என்று கோஷமிட்டுள்ளார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து இளைஞர்கள் சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.