Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கருணாகரன், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

PHOTOS INSIDE] Vishal and Arya wrap up Enemy's Dubai schedule

மேலும் சமீபத்தில் நடிகர் விஷால் 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் நிற்கும் அட்டகாசமான ஸ்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் துபாயில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதை தொடர்ந்து சென்னையில் எனிமி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது . அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .

Categories

Tech |