Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவரில் யார்க்கர்…பந்து வீசிய நடராஜனை … பாராட்டிய இங்கிலாந்து வீரர்கள் …!!!

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ,சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் நடராஜனை  இங்கிலாந்து வீரர்கள் பாராட்டியுள்ளனர் .

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட  , 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ,நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.இந்த தொடரில் இங்கிலாந்து அணியில்  சாம்கரண் , கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த கடைசி ஓவருக்கான பந்துவீச்சை ,இந்திய அணி வீரர்  நடராஜன் பந்துவீசினார்.

நடராஜன் பந்து வீசிய கடைசி ஓவரில், சாம்கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது.  இதற்காக நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இதைப்பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டனான  மைக்கேல் வாகன் கூறும்போது, நடராஜன் இறுதி ஓவரில் யார்க்கர் பந்துகளை வீசி, இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். தற்போது யார்க்கர் பந்துவீச்சு அழிந்து கொண்டே வருகிறது. இந்த யார்க்கர் பந்து வீசுவது சுலபமானது  அல்ல.

இதை துல்லியமாக செயல்படுத்தி, பந்து வீசுவது மிக கடினமான விஷயம். எனவே நடராஜன் பதட்டமான நேரத்தில் ,இறுதி ஓவரில் யார்க்கர் பந்துகளை வீசி , மிகச் சிறப்பாக விளையாடினார்,  என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனான  மைக்கேல் வாகன்  ,நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் ஆட்டமிழக்காமல் விளையாடிய சாம்கரண்  கூறுகையில், கடைசி ஓவரில் நடராஜன் மிக சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி, இந்திய அணியை  வெற்றியடைய  செய்தார். அதுமட்டுமல்லாது அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

Categories

Tech |