Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண்ணின் கழுத்திற்கு கத்தி மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு புகார்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற தாய் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். இதனால் தூங்கி கொண்டிருந்த மல்லிகா உடனே எழுந்து சென்று கதவைத் திறந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மல்லிகாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்த ரூ.85 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கரன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |