அக்காவிடம் பேசுங்கள் என்ற தலைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கின்றது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அசுர வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. மேலும் பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. அங்கு ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 18 மக்களவை தொகுதியில் பாஜக வென்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு தேர்தலில் தன் வசம் வைத்திருந்த 12 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் பறி கொடுத்தது.
இந்த திரினாமுலின் இந்த தோல்வியையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.‘அக்காவிடம் பேசுங்கள்’ என்ற தலைப்பில் 1000 திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து 100 நாட்கள் கிராமம் கிராமமாக பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் மக்களின் குறைகள் கேட்கப்படுமென்று தெரிவித்ததோடு 2021_ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பு பிரச்சாரமாகவும் இது பார்க்கப்படுகின்றது.