அமெரிக்க முன்னாள் அதிபரின் வளர்ப்பு பாட்டி தன் 99 வயதில் இன்று மருத்துவமனையில் காலமானார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவின் 99 வயதுடைய வளர்ப்பு பாட்டியான சாரா ஒபாமா இன்று கென்யாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் காலமானார். இவரது மகள் கொரோனா தொற்று அவருக்கு ஏற்படவில்லை என்று உள்ளூர் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
சாரா ஒபாமா, ஒபாமாவின் தாத்தாவிற்கு மூன்றாம் தாரம் ஆவார். இவர் அதிபர் ஒபாமாவை முஸ்லிம் என்றும், அவர் பிறந்தது கென்யாவில் என்றும் விமர்சனங்கள் எழுந்த சமயத்தில் அதனை கடுமையாக எதிர்த்திருக்கிறார். அமெரிக்க அதிபராக கடந்த 2008 ஆம் வருடம் பராக் ஒபாமா பதவியேற்ற பின்பு சாரா ஒபாமாவின் வீடு மற்றும் கிராமம் தேசிய அளவில் கவனம் ஈரக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் கல்வி மற்றும் ஏழை குழந்தைகளுக்கு உணவளிப்பது போன்ற பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் கென்யாவின் ஜனாதிபதி, தன் ட்விட்டர் பக்கத்தில், “சாரா ஒபாமாவின் உயிரிழப்பு நாட்டின் பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார்.