பாகிஸ்தானில் தற்போது கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் பின்பற்றிய வந்த நிலையில் மீண்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்திற்குள் 4767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 64592 யாக உயர்ந்துள்ளது. இந்தக் கொடிய வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14215 ஆகவும் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் பாகிஸ்தான் 31வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் புதிய பாதிப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆகையால் மக்களின் பாதுகாப்பை கருதி கட்டுப்பாடுகள் கடுமையான முறையில் இருக்கும் என்று நாட்டு அரசு தெரிவித்துள்ளனர்.