தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தலுக்காக வரையப்பட்ட தாமரை சின்னத்தில் பிரதமர் மோடியின் பெயரையோ, பாஜக கட்சியின் பெயரையோ குறிப்பிடாமல் அம்மாவின் சின்னம், எம்ஜிஆரின் சின்னம் என வரையப்பட்ட ஓவியங்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக எல்.முருகன், அண்ணாமலை போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக சின்னத்தை மாற்றிவிட்டதா ? என விமர்சனங்களும் எழுந்துள்ளன.