எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
எகிப்தில் சோஹாக் மகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 19 ஆக குறைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 இலிருந்து 185 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் ஆகையால் அடிக்கடி இதுபோன்ற ரயில் விபத்துக்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று 2002 ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . மேலும் 2017 ஆம் ஆண்டில் மட்டும் 1793 ரயில்கள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.