Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்…. நீண்ட போராட்டத்திற்கு பின் நகரத்தொடங்கியது…!!!

உலகின் மிகப்பெரிய வர்த்தக கடல் வழியான சூயஸ் கால்வாயில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது வீசிய பலத்த காற்றின் காரணமாக கப்பல் கால்வாயின் குருக்க்காக மாட்டிக்கொண்டது. இதனால் கடல்வழி போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக 321 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிரீன் சரக்கு கப்பல் மீட்கப்பட்டு வழக்கமான பாதைக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த கப்பல் நகரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சூயஸ் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. 20 ஆயிரம் சரக்குகளுடன் சென்ற கப்பல் மார்ச் 23 ம் தேதி சூயஸ் கால்வாயில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |