Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வேன்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு…. சோக சம்பவம்..!!

நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அதிகாலை லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த 14 பயணிகளில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மற்ற நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கும் ஒருவர் உயிரிழந்தனர்.

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 8 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 6 பேர்  படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் ஸ்ரீசைலத்தில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |