தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சாமானிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் வீதியில் மக்கள் அனைவருக்கும் சொந்தமாக நிலம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும். தமிழகம் முழுவதும் 14 லட்சம் வீடுகள் கட்டித் தரப் பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.