கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய இயற்கை முறையில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.
கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்