நெல்லையில் பெருமாள் தங்கத்தேரில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வானமாமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பு கொடியேற்றத்துடன் நடக்க தொடங்கியது. இதிலிருந்தே வானமாமலை பெருமாள் கோவிலில் இருக்கும் மூலவருக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற பங்குனி மாத திருவிழாவில் பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். அந்த வகையில் பெருமாள் தங்கத் தேரில் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டே முக்கிய வீதிகளில் உலா வந்தார்.