Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்… நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல்…. இருவர் பலி….!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் என்று நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கவுன்சிலர் உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா சோப்பூர்  என்ற இடத்தில் நகராட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் கவுன்சிலர் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. அதன்பின் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஜம்மு- காஷ்மீர் காவல் துறையினர் சுற்றி வளைத்து இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து மாநாடு அமைப்பின் தலைவர் ஷபிக் மிர்”நாங்கள் மூன்று அடுக்கு பஞ்சாயத்து தேர்தலை செய்து முடித்து விட்டோம். மத்திய அரசு எங்களை முழுவதுமாக பாதுகாக்க தவறி விட்டது” என குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |