ஆஸ்திரேலியா அமைச்சரவையில், பெண்களுக்கு தொடர்ந்து பதவி உயர்வுகளை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார் .
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை மந்திரிகளான லிண்டா ரெனால்ட்ஸ் மற்றும் அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகிய இருவர் மீது கற்பழிப்பு புகார்கள் எழுந்துள்ளதால், அந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களுக்கு எதிராக போராடிவருவதால் ,கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 2 மந்திரிகளையும் அமைச்சரவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டார்.
உள்துறை மந்திரியான பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்பு துறையினர் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யும்போது ,அந்நாட்டு பிரதமர் பெண்களுக்கு தொடர்ச்சியாக பதவி உயர்வுகளை வழங்கினார். இதுவரையில் ஆஸ்திரேலியா அமைச்சரவையில் இல்லாத அளவிற்கு, பெண்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.