Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்கலாம் எவ்வளவு சட்டம் போட்டாலும் திருந்த மாட்டாங்க…. ஏசி மெக்கானிக் ஊழியர் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் ஏசி மெக்கானிக் தொழிலை பார்த்து வந்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது.

தற்போது உள்ள காலகட்டத்தில் பல இடங்களில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக சட்டத்துக்குப் புறம்பான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு நீதிமன்றம் கடுமையான சட்டங்களை பிறப்பித்தும் கூட இன்றளவும் அவர்களுக்கு எதிரான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஏ.சி மெக்கானிக் வேலையை பார்த்துள்ளார். இந்நிலையில் இவர் 16 வயதான சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |