அமெரிக்காவில் மிக விரைவில் 90%மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைந்து கொண்டிருக்கிறது . அதனால் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் 100 நாட்களில் 200 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனது திட்டத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதிலிருந்து தற்போது வரை அமெரிக்காவில் 14 .58 கோடிக்கு அதிகமானோர்க்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வாரம் நாடு முழுவதும் சராசரியாக 27 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வரை புதிதாக தினசரிகொரோனா பாதிப்பு 63 ஆயிரத்திற்கு மேலான உறுதி செய்யப்பட்டுவந்தது . இந்த தகவலை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . மேலும் 73% சதவீத முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது . அமெரிக்காவில் 17 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வந்தநிலையில் தற்போது 40,000 முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றுஅந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் . இதனையடுத்து வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் மக்களுக்கு 90 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .