Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… வெதர்மேன் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி… மிகவும் ஆபத்தானது…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை மிக ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவில் விரைவில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 1918 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்று நோயாக இருந்தாலும், பிரேசிலில் இரண்டாவது அலையாக இருந்தாலும் சரி. 2 வது அலைகள் எப்போதும் சரீரஇளங்கலை புறக்கணிப்பதால் மிகவும் ஆபத்தானவை என அவர் எச்சரித்துள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |