Categories
உலக செய்திகள்

சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்…. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. தகவலை வெளியிட்ட பத்திரிக்கை….!!

பாகிஸ்தானில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலின் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய செய்தியினை டவான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் புராணகிலா என்ற பகுதியில் சுமார்  100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் உள்ள சிலை அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கதவுகள் மற்றும் படிக்கட்டுகளை உடைத்து எறிந்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் ராவல்பிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரில் கோவிலுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் டவான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |