நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் பிரபுதேவா . தனது நடன திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் 100 படங்களுக்கும் மேல் நடனம் அமைத்துள்ளார். மேலும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நடன இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார்.
சமீபத்தில் பிரபுதேவா மும்பையை சேர்ந்த ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சார்மி பிரபுதேவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபுதேவாவா இது ? என ஆச்சரியமடைந்துள்ளனர்.