அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதியம் 12 :50 அளவில் பாரத பிரதமர் பொதுக் கூட்டங்களில் பேசயிருக்கிறார். இந்நிலையில் இந்த பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே குப்பணங்கோவில் டோல்கேட் அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மோதிக்கொண்டன. அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற கார்கள் மோதிக்கொண்டதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். காயமடைந்த காவலர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.