Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் சற்றுன்முன்….. புதிய தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கு மத்தியில் தேர்தல் ஆணையமும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு 15 வருட பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது, 2017 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பட்டியலை பாதுகாப்பது கருதி வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |