பிரபல இசையமைப்பாளர் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இவர் தற்போது வெளியாக உள்ள கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்ரமின் சியான்60 படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பறை இசைக் கலைஞர்களுக்கு நடுவில் நின்று கொண்டு அவர்கள் வாசிக்கும் இசைக்கு சந்தோஷ் நாராயணன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் சந்தோஷ் நாராயணனை பாராட்டி வருகின்றனர்.மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Music_Santhosh/status/1376227254544461824