Categories
உலக செய்திகள்

சிறுவனை துன்புறுத்தி தெருவில் வீசி சென்ற நபர்.. சிசிடிவி காட்சியில் வெளியான பதற வைக்கும் காட்சி..!!

அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

அமெரிக்காவிலுள்ள மியாமி  என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் பின்பு உடனடியாக அவசர சிகிச்சை குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று அச்சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதில் அந்த சிறுவன் ரத்த காயங்களுடன் அந்த வழியாக சென்ற நபர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுகிறார். உடனே ஒரு நபர் சிறுவனுக்கு தண்ணீர் கொடுக்க வருகிறார்.

இப்பரிதாப சம்பவம் தொடர்பில் சிறுவன் குறித்த எந்தவித தகவலும் காவல்துறையினர் வெளியிடவில்லை. எனினும் குற்றத்தில் தொடர்புடைய நபரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த சிறுவனை யாரோ கடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதன் பிறகு தாக்கி வாகனத்திலிருந்து தூக்கி வீசிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |