Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் இது தான் நடக்குதா…? வசமாக சிக்கிய வாலிபர்…. நோட்டமிட்டு தூக்கிய போலீஸ்….!!

மதுரையில் கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சில இளைஞர்கள் ஆண்டாண்டாக எடுத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களும் பெருகி போதைப் பொருட்கள் விற்பனையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் செல்வத்தை நோட்டமிட்டு வந்ததில் அவர் அதே பகுதியிலிருக்கும் முட்புதருக்குள் வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் செல்வத்தை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |