Categories
கல்வி மாநில செய்திகள்

”தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது” முழுமையாக நீக்கி சுற்றறிக்கை ….!!

தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது என்ற பாடத்திட்டம் முழுவதையும் நீக்கி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1_ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான இந்த கல்வியாண்டின் பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை மாற்றியமைத்தது. இதில் பல்வேறு சர்சைக்குரிய கருத்துகளுடனும் , பிழைகளுடன் பாடத்திட்டம் இருந்தது சர்சையை ஏற்படுத்தி பல்வேறு கல்வியாளர்களின் விமர்சனத்துக்குட்பட்டது. இதையடுத்து பாடத்திட்டத்தில் இருந்த 19 பிழைகளை வரை நீக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சர்சையை ஏற்படுத்தியது +2 ஆங்கில பாடத்திட்டம். அதில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற அர்த்தத்தில் இருந்தது.

Image result for பாடத்திட்டம்

இதை தொடர்ந்து மீண்டும் சர்சை எழுந்தது. மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து ஆங்கில பாடபுத்தக தயாரிப்பில் ஈடுபட்ட 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் , இதுகுறித்து நடவடிக்கை  எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் +2 பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை நீக்க சொல்லி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

Image result for தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது

இந்நிலையில் ,  பாடத்திட்ட தயாரிப்பு பணியில் ஈடுபட்ட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2019-20-ஆம் கல்வியாண்டில் வெளிவந்துள்ள புதிய பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் (பக்கம் எண்.142 முதல் 150 வரை) உள்ள அலகு-5, ‘தி ஸ்டேட்டஸ் ஆப் தமிழ் அஸ் ஏ கிளாசிகல் லாங்குவேஜ்’ என்ற பாடம் முழுவதையும் நீக்க பட்டியலிட்டு அனுப்பப்படுகிறது.இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் திருத்தப்பட்டியலை அனுப்பி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

Categories

Tech |