மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று மாலையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சுகாதாரத் துறை நிபுணர்களுடன் முதல்அமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, ” பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது.” என்றார்.
கர்நாடகத்தில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனாவுக்காக பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகும். அதனால் கொரோனாவுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்படாது. என்று திட்ட வட்டமாக தெரிவித்தார். அதே நேரம், பல்வேறு கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.