Categories
தேசிய செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்….!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் மேலும் 14 பேரை தகுதி நீக்கம் செய்தார்.

இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் அரசுக்கு எதிராக ராஜினாமா செய்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி சார்த்த 11 எம்எல்ஏக்கள் ,  3 மஜத  கட்சி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 14 காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து தகுதி நீக்கம் செய்யப்படடவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |