சீனாவில் உள்ள உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தன. இதனால் மக்களும் வேலை வாய்ப்பினை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து வந்தனர். இதனால் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுபடுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த வைரஸ் சீனாவில் உருவானதா என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்ய சீனாவிற்கு சென்றிருந்தது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை என்று WHO ஆய்வறிக்கையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. WHO-ன் அதிகாரபூர்வ ஆய்வு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் வவ்வால், அல்லது பதப்படுத்தபட்ட மாமிசத்திடமிருந்து மனிதனுக்கு நேரடியாக பரவியிருக்கலாம் என்று ஆய்வு கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.