TNPL தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன.
இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.TNPL தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன. திண்டுக்கல் MGR கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இது வரை நடந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ள. அதில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறாமல் திருச்சி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்ற மதுரை ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.