மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த நாளாகவே இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக நீங்கள் முன்னேற்றகரமான திட்டங்களை வழி வகுப்பீற்கள். இன்று உங்களுக்கு தனவரவு இரட்டிப்பாக இருக்கும். மன மகிழ்ச்சியும் இரட்டிப்பாக இருக்கும். உங்களுடைய எண்ணங்களுக்கு கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கக்கூடும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இன்று பலமாக உள்ளது. உங்களுடைய சொல்லுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். பெற்றோர்களுக்கு வேண்டியதை நீங்கள் செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கும்.
அந்த பிரச்சினைகளையும் கூட நீங்கள் ஓரளவு சமாளித்து விடுவீர்கள். இன்று நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வில்லையே என்று கவலைப்படுவீர்கள். அலுவலகம் ரீதியாக உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு போன்ற நற்செய்திகளில் வரும்.
சில நபர்களுக்கு வீட்டை இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனையும் உதிக்கும். சில நபர்களுக்கு வாகனம் மாற்றலாமா என்ற சிந்தனையும் உதிக்கும். புதிதாக ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை கூட இருக்கிறது. சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி விடும். மேலதிகாரிகளிடம் இருந்த கருத்து வேற்றுமையும் சரியாகிவிடும்.
உங்கள் மீது நல்ல எண்ணங்கள் கண்டிப்பாக உருவாகும். இன்று நீங்கள் வெளிப்படையாக பேசி அனைவரையும் கவர்வீர்கள். எதிலும் எதார்த்தமாக நடந்து கொண்டு அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பெரிய அளவு பிரச்சனையும் இல்லை.
கடன் பிரச்சினைகள் தான் அவ்வப்பொழுது வரும். காதலில் உள்ளவர்களுக்கு காதலில் சில பல பிரச்சனைகள் வரும் பின் காதல் கைகூடும்.
இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு எதிலும் முன்னேற கூடிய வாய்ப்புகள் உள்ளது. கல்விக்காக நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் முன்னேற்றமே உள்ளது.
இன்று உங்களுக்கு சிந்தனைத்திறன் வலுப்படும். ஞாபகத் திறனும் கூடிவிடும்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.