Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு ரூ.1,000 கொடுக்கும் அதிமுகவினர்… மதுரையில் தீயாக பரவும் வீடியோ…!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அதிமுகவினர் வினியோகம் செய்ததை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு வலையங்குளம், ஆலம்பட்டி பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆயிரம் ரூபாய் வினியோகம் செய்யப்பட்டது. அதிமுகவுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய காட்சிகள் வெளியாகி பிற கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தும் அதிகாரிகள் முன்வராத காரணத்தால், அமைச்சருக்கு தேர்தல் அதிகாரிகள் துணை போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |