கனடா பாதுகாப்பை கருத்தில்கொண்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்த இடைக்கால தடை விதித்துள்ளது.
கனடாவில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்பட்டதால் தேசிய ஆலோசனை குழுவான NACI தற்காலிகமாக தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமையில் கனடாவில் உள்ள மாகாணங்கள் அஸ்ட்ராஜெனகாவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளன.
இதுகுறித்து NACI தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் செலுத்தப்பட்ட போது அரிய வகையான இரத்த உறைவினால் சிலர் பாதிப்படைந்தனர். அவர்களில் அதிகமானோர் 55 வயதிருக்கும் குறைவான பெண்கள். மேலும் இதனால் 40% வரை உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே ஐரோப்பிய நாடுகள் பல அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தி கொள்வதை இடை நிறுத்தம் செய்தன. அதன்பின்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளரான Europeans Medicines Agency, தடுப்பூசி பாதுகாப்பு தான் என்று தெரிவித்ததை தொடர்ந்து அதனை மீண்டும் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே Health Kanada ரத்த உறைவினால் கனடாவில் பாதிப்படைந்ததாக எந்தவித தகவலும் தெரியவில்லை என்று கூறியுள்ளது. எனினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 50 வயதிற்கு குறைவான நபர்களுக்கு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்துவதை கனடா இடைநிறுத்தம் செய்துள்ளது.