Categories
லைப் ஸ்டைல்

மருத்துவ குணம் நிறைந்த ஏலக்காய் கஷாயம்… இதை குடித்தால் எல்லா நோயும் போய்விடும்…!!!

பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஏலக்காய் கசாயம் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஏலக்காய் வாசனை பொருளாக இருந்தாலும் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதனைப் காவிரி மற்றும் கஷாயம் போன்ற அனைத்திலும் பயன்படுத்தலாம். நாம் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றால் பல நோய்கள் குணமாகும். அதிலும் குறிப்பாக ஏழைகள் கஷாயம் மூக்கடைப்பு, மன அழுத்த பிரச்சனை, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பல நோய்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அவ்வாறு ஏலக்காய் கஷாயம் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நான்கு அல்லது ஐந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே போய்விடும். மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறையும்.

நாக்கு வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர் சுருக்கு, மார்பு சளி மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் கிடைக்கும். ஏலக்காயை அதிகமாக அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது மிகவும் நல்லது. விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி வடிகட்டி மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் போதும் விக்கல் நின்றுவிடும்.

வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Categories

Tech |