Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகை ரெஜினா துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ரெஜினா ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா ஆகிய படங்களில் ரெஜினா சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . இந்நிலையில் இவர் துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த ரெஜினா கசாண்ட்ராவின் செயல் !  - Tamil Movie Cinema News

இது குறித்து ரெஜினா தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்த விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றது தனக்கு மகிழ்ச்சி என்றும் இந்தப் போட்டியில் தனக்கு ஒத்துழைப்பாக இருந்த பயிற்சியாளர் சேகர் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தல அஜித் பாணியில் ரெஜினா அசத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் . சமீபத்தில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |