Categories
தேசிய செய்திகள்

சீரழித்த சிறுமியை… கயிற்றால் கட்டி கொடுமைப்படுத்திய ஊர்மக்கள்…. மனதை உலுக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் வலுக் கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் அந்த சிறுமியை அந்த இளைஞருடன் கயிறால் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியை அடித்து கொடுமை செய்த அந்த கிராமத்தை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |