விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 5 ஆரம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் குறித்த பெயர்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த முறை யூடியூப் பிரபலம் மதன் கௌரி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதன் கௌரியை 46 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருடைய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.