நாடு முழுவதும் கொரோன பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு கொரோனாவை குறைக்க சென்னையில் மருத்துவ கட்டுப்பாடு தீவிரப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பிறகு முழு கவனமும் கொரோனாவை குறைப்பது பற்றி தான் இருக்கும் என்றும் கூறினார். மேலும் நேர கட்டுப்பாடுகள், பகுதி ஊரடங்குகள் அமல்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார்.