தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். மேலும் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும் தேர்தல் அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரெப்கோ வங்கி மூலமாக அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அந்த வங்கியின் முன்னாள் இயக்குனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்துள்ளார். ரெப்கோ வங்கியின் தலைவராக உள்ள செந்தில்குமார் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளராக இருப்பதாகவும், இயக்குனர்இசபெல்லாவும் அதிமுகவை சேர்ந்தவர் என்பதாலும் முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.