தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். அப்போது , பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமருக்குப் பாஜக மாநில தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார். இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் ஜிகே மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மேடையில் மொத்தம் 14 வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார்.