Categories
மாநில செய்திகள்

இரவும் பகலும் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல்… நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கிறார் மோடி… முதல்வர் பாராட்டு..!!

தாராபுரத்திற்க்கு வந்த பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு, எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

தாராபுரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. பிரதமர் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் இந்திய நாடு முன்னேற இரவு பகல் பாராமல் உரைக்கின்றார்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க இருக்கிறார். தமிழகம் கேட்கும் திட்டங்களை மத்திய அரசு கொடுத்து வருகிறது. 1. 65 லட்சம் கோடிகள் கொடுத்துத் தேசிய நெடுஞ்சாலைத் துறையை வளர்ச்சி அடைய வளர்ச்சி அடைய வைத்துள்ளது.

நலத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருக்க வேண்டும். திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பிரதமர் மனது வைக்க வேண்டும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 தொழிற்சாலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். மேலும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தால் வறட்சியாக உள்ள இந்தப் பகுதிகளில் எல்லாம் பசுமையாக மாறப்போகின்றன என்றும் முதலமைச்சர் தமது உரையின்போது தெரிவித்தார்.

Categories

Tech |