மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு 13 வயது பெண் குழந்தையும் மற்றொரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு அந்த கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தனது 13 வயது மகளையும், மகனையும் சேர்த்து அந்த நபருடன் வாழ்ந்து வந்தார்.
அந்த நபருக்கு 34 வயது இருக்கும். அவர் அந்த 13 வயது குழந்தையை கடந்த நான்கு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த குழந்தையை மிரட்டி உள்ளார். இதை பார்த்த சகோதரன் அவரது தாயிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த தாய் அங்கிருந்து பெண் குழந்தைகளை அழைத்து வேறு ஒரு இடத்திற்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அந்த இடத்தையும் கண்டுபிடித்து அந்த நபர் அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் உயிருக்கு பயந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த வளர்ப்புத் தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.