தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நோய்தொற்று சூழல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகவும், பன்மடங்காகவும், பரவி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.