கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளின் பட்டியலில், பிரேசில் 2வது இடத்தை பெற்றுள்ளது.
தற்போது பிரேசிலில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதனால் அதிகம் பாதித்த உலக நாடுகளில் பட்டியலில் 2வது இடத்தை பெற்றுள்ளது. எனவே பிரேசிலில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரியான எர்னஸ்டோ அராஜோ கொரோனா தடுப்பூசியை பெறுவதில், தோற்றுவிட்டதாக அந்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
வெளியுறவுத்துறை மந்திரியான எர்னஸ்டோ அரோஜோ முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் சீனாவிற்கு எதிராக முரண்பாடு கருத்துக்களை பேசியது போன்ற காரணத்திற்காக, பிரேசில் கொரோனா தடுப்பூசி பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் தன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளதால் ,தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.