நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நோய்தொற்று சூழல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகவும், பன்மடங்காகவும், பரவி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.